துதித்திடுவேன் என்றும் துதித்திடுவேன்
துதிக்கு பாத்திரர் நீரேயன்றோ
துதித்தலே எந்தன் இன்பமல்லோ(2)
துதித்தலே எந்தனின் மேன்மையல்லோ(2)
1. வானாதி வானங்களும் துதித்திடுமே
வானவர் இயேசுவே உம் மகிமை கண்டு
வல்லவர் உம்போல் எவருண்டு?
வல்லமையும் பெலனும் உம்
சொந்தமல்லோ
2. காகளும் களிப்புடன் துதித்திடுமே
காலையிலே கர்த்தாவே உம் திருநாமத்தை
அதிகாலை உம் சமூகம் என்றும் தேடியே
அகமகிழ்ந்திடுவேன் புதுக்கிருபையால்
3. ஆகாயத்து பட்சிகளும் துதித்திடுமே
ஆண்டவர் நீர் தந்த ஆகாரத்திற்க்காய்
என் தேவைகளை ஏற்ற வேளை
சந்திக்கும் என் தாயும்
தந்தையும் நீர்தான் அல்லோ
4. தூதர் கூட்டம் என்றும் துதித்திடுமே
தூயவரே உம் தூய்மை கண்டு
பாதகர் எம்மையும் தூய்மையாக்கும்
பாவிகளின் நேசர் நீர்தான் அல்லோ
5. தேவமக்கள் என்றும் துதித்திடுவார்
தேவமைந்தன் தம் பாக்கியம் கண்டு
மண்ணின் சாயலாம் தம் சாயலே
விண்சாயல் ஆகும் பாக்கியம்
பெரிதல்லவோ
HOME
More Songs